2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'ஆசிரியர்களின் செயற்பாடுகளே மாணவர்களை மாற்றுகின்றன'

Niroshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.எ.காதர்

ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் செல்கின்ற போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் பாடசாலைகளில் மாணவர்கள் மிகவும் முக்கிய மாணவர்கள் மிகவும் கூர்மையானவர்கள் அவர்கள் ஆசிரியர்களின் நடத்தைகளிலும் வார்த்தைகளிலும் ஒரு கனவை வளர்த்துக் கொள்வார்கள் அந்தக் கனவை நிறைவு செய்ய முயற்சிப்பார்கள் என கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.  

கல்முனை கல்வி வலயம் ஏற்பாடு செய்த 'ஆரம்பக் கல்வி அபிவிருத்தியை நோக்கிய  மாநாடு-2016' சனிக்கிழமை (12) கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

ஆசிரியர்களின் சின்னச் சின்ன நடத்தைகள் ,வார்த்தைகள் என்பவற்றை மிகவும் அவதானமாகப் பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் செயற்பாடுகளே மாணவர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாற்றுகின்றன என்பதில் ஆசிரியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

இங்கு ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.உதயகுமார்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதில், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்ட  அதிபர்களும் எழுநூறுக்கு  மேற்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .