2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆசிரிய சேவையில் கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் சித்தியடைந்த 2,000 பேரை ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு கோரிய தனிநபர் பிரேரணையை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'க.பொ.த. உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் சித்;தியடைந்த 2,000 பேருக்கு மத்திய அரசாங்க கல்வி அமைச்சில் இணைத்து ஆசிரியர் நியமனம் வழங்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்திட்டம் மேற்கொள்ளப்படும்போது கிழக்கு மாகாணத்தில் தொழிலின்றி காணப்படும் கணிதம், விஞ்ஞான துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைக்கு இலகுவான முறையில் தீர்வு காணப்படுவதுடன், படித்துவிட்டு தொழிலுக்காக காத்திருக்கின்ற மாணவர்களுக்கும் தொழில் வாய்ப்பினை வழங்க முடியும்.

நாட்டில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய க.பொ.த உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் சித்தி அடைந்துள்ள 2000 பேரை மத்திய கல்வி அமைச்சில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களுக்கான பயிற்சியினை வழங்கி பட்டப்படிப்புகளை மேற்கொண்டு பட்டதாரிகளாக்குவதற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி பின்னர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களாக பாடசாலைகளுக்கு நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே, இவ்வாசிரியர் நியமனத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய அரசாங்க கல்வி அமைச்சர் அகிலராஜ் காரியவசம் ஆகியோர்களிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்க வேண்டும்' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .