2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக அம்பாறை மாவட்டம் திகழ வேண்டும். அதற்காக ஜாதி மத பேதமின்றி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கை மக்கள் எனும் எண்ணத்துடன் பயணிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சருமான தயாகமகே தெரிவித்தார்.

ஆலையடிவேம்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்பாறை மாவட்ட தழிழ் பிராந்திய செயற்பாட்டு தலைமை காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் இனி இன,மத வேறுபாட்டுக்கு இடமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.

ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில்  சிறந்ததொரு அரசியல் புரட்சி ஏற்படுத்தப்பட்டது.  இவ்வாறான சிறந்த அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தியதன் விளைவாக வெளிநாடுகளில் நாம் சிறந்த நன்மதிப்பை இன்று பெற்றுள்ளோம்.

அவ்வாறான மாற்றம் ஏற்படவில்லையாயின்  நாடானது இருண்ட யுகத்துக்குள் சென்றிருக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .