2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘என்னைத் துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது’

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

“என்னைத் துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது. அது எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன். அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால், இறுதிவரை தலைவர் என்னைத் துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால், அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின அம்பாறை - பாண்டிருப்பு பிரிவுக்கான பொதுமக்கள் கலந்துரையாடல், பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில், நேற்று (12)  மாலை நடைபெற்றது.

 அங்கு கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “எனக்கும்  தலைவருக்குமே தெரியும் என்ன பிரச்சனை என்று. இன்று பலர் அரசியற்கட்சி தலைவர்களைத் தேசிய தலைவர் என்று விழிக்கின்றனர்.  தேசியத் தலைவர் என்றால் தலைவர் மாத்திரமே. அது ஒரு வரலாற்று அத்தியாயம். அதை மீண்டும் உருவாக்க முடியாது” என்றார்.

அத்துடன், “மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத் தொடர்பற்ற முறையில் கல்வி வலயத்தை அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உருவாக்க முடியுமெனில் ஏன் அம்பாறை மாவட்டதில் சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு கல்வி வலயத்தை உருவாக்க முடியாது?” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

“இது இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகளின் தவறு” என்று குற்றஞ்சாட்டிய அவர், “இந்தப் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்வி வலயம் உருவாக்கபடுமானால், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும்” என்றார்.

மேலும், கருணா அம்மான் துரோகி என்று என்று கூறப்படுவதையிட்டுத் தான்  கவலைப்படுவதில்லையெனவும் அது டொக்டர் பட்டம் மாதிரிதான் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்த அவர், “கடந்த காலப்  போராட்டம் நீடித்திருந்தால் நாம் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம். தற்போது  அனைவரையும் காப்பாற்றியவர் நான்தான்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .