2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒலுவில் வளாகத்தில் புதிய கட்டடம்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, சலீம் றமீஸ்

தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில், 450 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பவியல் பீடத்துக்கான புதிய கட்டடம், நேற்று (06) வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி. முகம்மட் தாரிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார்.

இந்த புதிய கட்டடத் தொகுதி 400 ஆசனங்களைக் கொண்ட அதிநவீன மாநாட்டு மண்டபம், மாணவர்களுக்கான விரிவுரை மண்டபங்கள், ஆய்வு கூடங்கள், கணினி ஆய்வு கூடங்கள், களஞ்சிய அறை, சிற்றுண்டிச்சாலை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், நீதியாளர் பஸீலூர் ரகுமான், நூலகர் எம்.எம். றிபாய்தீன், பீடாதிபதிகளான கலாநிதி ஏ. றமீஸ், கலாநிதி எஸ். குணபாலன், கலாநிதி யூ.எல். செய்னுதீன், கலாநிதி எம்.எம். ஜுனைடீன், கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர், திணைக்களத் தலைவர்களும், விரிவுரையாளர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .