2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காரைதீவில் 16 பேருக்கு டெங்கு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

தொடரும் மழையால் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில் இம்மாதம் 16 பேர் டெங்கு நோய்க்கு இலக்காகியுள்ளனர் என, தலைமை சுகாதார பரிசோதகர் றாசிக் தெரிவித்தார்.

குறிப்பாக, 1ஆம் பிரிவு 6ஆம் பிரிவு மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களில் கூடுதலாக டெங்கு நோய்க்குரிய காரணிகள் தென்படுவதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்பகுதிகளில் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  புகைவிசிறும்பணி இடம்பெற்றுவருவதாகவும், தலைமை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரியிலிருந்து ஒக்டோபர் வரை 8 பேர் டெங்குநோயின் தாக்கத்துக்குள்ளாகியிருந்த நிலையில் இம்மாதம் மட்டும் நேற்று வரை 16 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, காரைதீவில் டெங்கு நோயின் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

வீதி வீதியாக புகைவிசிறும் பணி கடந்த ஒரு வார காலமாக பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .