2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இது சம்பந்தமான உயர்மட்ட கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையில் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.    

இதன்போது கல்முனை நகர அபிவிருத்திக்காக முதல் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வது சம்மந்தமாகவும் முதல் கட்ட வேலை சம்மந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

அந்த வகையில், காணி மீட்பு ஆணைக்குழுவோடு அம்பாறை அரசாங்க அதிபரும் இணைந்ததாக முதலில் காணி நிரப்புவதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்த அடிப்படையில் முதலில் கல்முனை இறைவெளிக்கண்டத்தில் உள்ள 13 ஏக்கர் காணியும் சாய்ந்தமருது கரைவாகு கண்டத்தில் உள்ள 23 ஏக்கர் காணியும் நிரப்பப்பட்ட உள்ளது.

மேலும் சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்கான பூர்வாங்க திட்டமும் கையளிக்கப்பட்டு அத்திட்டமும் உடன் நடைமுறைப்படுத்த அங்கிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதில் சாய்ந்தமருது அல் ஹிலால் வீதி, பழைய தபாலக வீதி, மாவடி வீதிகளில் பாலங்கள் அமைக்கப்பட்டு நேர்த்தியான முறையில் கல்முனை அபிவிருத்தி திட்டத்தோடு இணைந்ததாக தோணா அபிவிருத்தி திட்டமும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

மேலும், கல்முனை மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு நிரந்தரமான தீர்வும் எட்டப்பட்டு இருக்கின்றது. அதுபோல் கல்முனை பிரதேச செயலகத்துக்;கு நிரந்தர கட்டடத்துக்கான காணி வழங்கும் விடயமும் முடிவாக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் இன்னும் வீதி அபிவிருத்தி மைதான அபிவிருத்தி நூலக அபிவிருத்தி போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கும் அங்கிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .