2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கள விஜயம் மேற்கொள்ள தீர்மானம்

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.எம்.எம்.றம்ஸான்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கான உடனடி பொதுத் தேவைகள் குறித்து ஆராய்ந்து ஊடகங்களில் அறிக்கையிடும் பொருட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்கள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டாக கள விஜயம் மேற்கொள்வதென,பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்தக் கூட்டம், பொத்துவில் அறுகம்பேயில் அமைந்துள்ள 'த ப்ளு வேவ்' ஹோட்டலில், பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் செவ்வாய்கிழமை(22) இடம்பெற்றது.

இக் கூட்டத்தில், பேரவையின் எதிர்காலநடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டபோதே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பேரவையின் அங்கத்துவ ஊடகவியலாளர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் கூட்டாக கள விஜயம் மேற்கொண்டு, அந்தப் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பொதுத் தேவைகள் குறித்து ஆராய்ந்து செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும் எனும் திட்டத்தை, பேரவையின் பொருளாளர் யூ.எல். மப்றூக் முன்வைத்தார்.

இதன் மூலம் பின்னடைந்த பல பிரதேசங்களில் நிலவும் குறைபாடுகளை ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டம், அனைத்து அங்கத்தவர்களின் அங்கீகாரத்துடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், பேரவையின் அங்கத்தவர்களுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தவர்கள், தமது கல்வி நடவடிக்கை உள்ளிட்ட செயற்பாடுகளில் வெற்றிகளையும் அடைவுகளையும் பெற்றுக் கொள்ளும் போது, அவர்களைப் பாராட்டி, பரிசுகள் வழங்குவற்கான ஒரு திட்டத்தினை செயலாளர் எம். சஹாப்தீன் முன்வைத்த போது, அதனையும் அங்கத்தவர்கள் ஏற்றுக் கொண்டு தீர்மான நிறைவேற்றினர்.

மேற்படி திட்டத்தின் ஆரம்ப முயற்சியாக. பேரவையின் உப தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். அப்துல் மலீகின் புதல்வர் பொத்துவில் அல் – பஹ்றியா வித்தியாலய மாணவன் எம்.ஏ. எம். அப்துர் ரஹ்மான் இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டார்.

இதேவேளை, பொத்துவில் பிரதேசம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விரிவாகப் பேசிய பேரவையின் உப தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அப்துல் மலீக், இந்தப் பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கையினையும் இங்கு முன்வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X