2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தை அபிவிருத்தி செய்வதற்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தினால் நடத்தப்பட்ட முஸ்லிம் பண்பாட்டு கலாசார மாகாண மட்ட கலாசார போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அஸ்- ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்டாட்டலுவல்கள் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.எல். விக்கிரம ஆராச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தொடர்ந்து உரையாற்றுகையில்,

கலாசாரத்தினூடாக இன உறவை ஏற்படுத்தி அதனூடாக நாட்டில் சமாதனத்தை ஏற்படுத்துவதற்கு இங்குள்ள கலைஞர்கள் முன்வர வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண காலங்களில் கலைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதொன்றாக அமைந்திருந்தது.

சமூகங்களில் தற்போது கலாசார பாரம்பரிய விளையாட்டு தூர்ந்து போகக் கூடிய நிலை காணப்படுகின்றது. இதனை முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒரு நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமானால் சமூகம் அபிவிருத்தி அடைய வேண்டும். இவ்வாறான கலாசார நிகழ்வினை ஏற்படுத்துவனூடாக ஒரு சமூகத்தின் கலாசார விழுமியங்களை மற்றைய சமூகம் புரிந்துகொள்ளக் கூடிய நிலை ஏற்படுகின்றது.

இன்று நாம் எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்ற சமாதானம் சமூக கலாசார விழுமியங்களுடாக முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது தான் எமது எதிர்காலம் சிறந்ததாக அமையும்.

இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி கலாசாரத்தினூடாக நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்வதற்கு முன்வர வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .