2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமூக சீர்கேடு காரணமாகவே தொற்று நோய் அதிகரித்துள்ளது : அலாவுதீன்

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சமூக சீர்கேடு காரணமாகவே தொற்று நோய் அதிகரித்து காணப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எமது பிரதேசத்தில் அண்மைக் காலமாக சமூக சீர்கேடுகள் அதிகாரித்து காணப்படுகின்றன. இதற்கு பொலிஸாரால் மட்டும் தீர்வு காண முடியாது.

சமூக சீர்கேடு சம்பவங்களோடு தொடர்புடையவர்களை அணுகி இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து அவர்களை விடுவித்து சமூகத்துக்கு நல்லவர்களாக மாற்ற வேண்டும்.

நாம் மனிதர் என்ற வகையில் சமூகத்துக்கு தன்னாலான நல்ல சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் முன்வைக்க வேண்டும்.

அந்த வகையில் சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் மனித நேயத்துடனும் முன்மாதிரியாகவும் செயற்பட வேண்டும்.

ஒரு திணைக்களம் சிறந்த முறையில் இயங்க வேண்டுமானால் அது சார்ந்த உத்தியோகத்தர்கள் திணைக்களத்துக்கு விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் செய்யற்பட வேண்டும்.

சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள்,பாலியல் சேட்டைகள் மற்றும் முறையற்ற கர்ப்பம் தரித்தல் போன்ற செயற்பாடுகளை எமது பிரதேசத்தில் இனங்கண்டு அவை கட்டுப்படுத்துவதற்கு கிராமங்கள் தோறும் சமய நிறுவனங்களுடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .