2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'சமாதானத்தை ஏற்படுத்துவது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும்'

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

இன உறவினூடாக சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அதனூடாக சமாதானத்தை ஏற்படுத்துவது நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும் என அட்டாளைச்சேனை மத்தியஸ்தர் சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். ஹாஸிம் தெரிவித்தார்.

இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் சர்வ மத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'சமூக வாழ்வை ஏற்படுத்துதல்' எனும் தொனிப் பொருளில் நேற்று சனிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சர்வ மத ஒன்று கூடலில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட சர்வ மத ஒன்றியத்தின் இணைப்பாளர் ஏ.எல். கிதுரு மொஹமட் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்,

நாட்டில் இன்று நாம் எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்ற சமூகங்களின் ஒற்றுமைக்கு நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் பல இன்னல்களை சுமந்தவர்களாக வாழ்ந்து வந்துள்ளோம். அதனால் நாம் ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொருவரையும் வேற்று மனப்பான்மையுடன் வாழ்ந்த வரலாறுகள் உள்ளன.

தற்போது இன விரிசல் இல்லாமல் ஒழிக்கப்பட்டு சகோதரர்களாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்றோம். இவை என்றும் நிலைக்க வேண்டும்.

நாம் நிம்மதியாக வாழ்ந்தால்தான் எதிர்கால சமூகம் நிம்மதியாகவும் சுமுகமாகவும் வாழும். அதற்கான வழி வகைகளை இவ்வாறான செயலமர்வுகள் மூலம் பின்பற்றி நடக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X