2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சாய்ந்தமருது ப.நோ.கூ.ச. இயக்குநர் சபை அ.இ.ம.கா. வசம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கடந்த 22 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணியின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணி கைப்பற்றியுள்ளது.

சாய்ந்தமருது ப.நோ.கூ.சங்கத்தின் 08 கிளைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் கடந்த மே மாதம் 07ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெற்றன. அக்கிளைகளுக்கு தெரிவாகியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் பொதுச்சபை அமைக்கப்பட்டு, அதிலிருந்து இயக்குநர் சபை உறுப்பினர்களைத்; தெரிவு செய்வதற்கான தேர்தல்  சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை (16) கிழக்கு மாகாணக் கூட்டுறவு உதவி ஆணையாளர் ஐ.ஏ.லத்தீப்பின் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது, மு.கா. சார்பு அணியினர் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றதை அடுத்து, அ.இ.ம.கா. அணியினர், இயக்குநர் சபைக்கு போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த இயக்குநர் சபையின் புதிய தலைவராக சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்;தரும் அ.இ.ம.கா. முக்கியஸ்தருமான ஏ.உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். உபதலைவராக அ.இ.ம.காங்கிரஸின் சாய்ந்தமருது 10ஆம் பிரிவுக் கிளைச் செயலாளர் எம்.ஐ.அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் மேலும் 07 பேர் இயக்குநர் சபையின் பணிப்பாளர்களாகத்  தெரிவாகியுள்ளனர்.

இந்த ப.நோ.கூ.சங்கத்தின் இயக்குநர் சபையானது 1994ஆம் ஆண்டு முதல் இதுவரைகாலமும் மு.கா.வின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .