2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 நவம்பர் 28 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரபு, இஸ்லாமிய பீடக் கேட்போர் கூடத்தில், நேற்று (27) ஆரம்பமானது.

இம்மாநாடு, “பல்துறைசார் கல்வியல் ஆய்வையும் புத்தாக்கத் திறனையும் மேம்படுத்தல்” எனும் தொணிப்பொருளில், சர்வதேச ஆய்வரங்கின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ், ஆய்வரங்கின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பாஸில் உள்ளிட்ட குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் இன்றும் (28) நடைபெறவுள்ள இவ்வாய்வு மாநாட்டில், மலேசியா நாட்டின் மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எட்மன்ட் றிரன்ஸ் கொம்ஸ் பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டுள்ளார். 

இவ் ஆய்வரங்கு மாநாட்டில் பொருளாதாரம், அரசியல், தொழில் நுட்பம், கலை, கலாசாரங்கள், சூழல் பாதுகாப்பு, சனத்தொகை பரம்பல் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட 53 வெளிநாட்டு, உள்நாட்டு ஆய்வாளர்களும் கலந்துகொண்டு, தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திரந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .