2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'நகராட்சிகள் முறையாக செயற்படுத்தாமல் சீரழிகின்றது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

நகராட்சிகள் முறையாக செயற்படுத்தாமல் சீரழிந்து செல்கின்றது. கல்முனை நகரமா? அல்லது கிராமமா? அல்லது இரண்டிற்கும் இடைப்பட்டதா? எனக்கும் அந்த சந்தேகம் இருக்கின்றது. அவ்வாறான குழப்ப நிலையில் கல்முனை மாறிப்போயிருக்கின்றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பாலமுனை கிராமத்தின் இப்னுஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற கவிஞர், ஊடகவியலாளர் பாலமுனை முஹா ( பி.முஹாஜிரின்) எழுதிய 'கடலோரத்து மணல்' எனும் கவிதை நூல் அறிமுக வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வீதியோரங்களிலும் சந்துபொந்;துகளிலும் நீர் நிலைகளிலும் பொலித்தீன் பைகளில் குப்பைகள் கொட்டுகின்ற அவலம் இல்லாமல்; இருப்பதுதான் கிராமம். அதுவே அதன் நன்மை.  இன்று இலங்கையில் உள்ள அதிகமான கிராமங்களின் நிலையும் அதுவே. ஆனால், இன்றைய நகரங்களின் நிலையை பார்க்கும்போது சகிக்க முடியவில்லை' என்றார்.

'இன்றைய நகராட்சிக்காரர்கள் எதிர்கொண்டுள்ள உள்ள மிகப்பெரிய சவால் திண்மக்கழிவகற்றல் என்கின்ற மிகப்பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பை இலங்கையில் உள்ள எந்த நகராட்சியும் முறையாக செயற்படுத்தாமல் சீரழிந்து செல்கின்றது. அந்த யுகத்திலே நாம் இருக்கின்றோம். ஆகவே இதற்கு விடைகாணாத ஒரு நிலையில் பாலமுனை கிராமமாகவே இருக்கட்டும் என்று பிரார்த்திப்பதிலே நானும் ஒருவனாக இருக்கட்டும்' என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் நூலினை வெளியீட்டு வைத்ததுடன்  முதற் பிரதியை ஊடகவியலாளர் எம்.பகுர்தீனிடம் இருந்து  பெற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .