2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நட்டஈடு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 23 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி கல்முனை பிரதான பஸ் நிலையத்துக்கு பின்னாலுள்ள வயல்வெளியில் இன்று திங்கட்கிழமை கல்முனைப் பிரதேச விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனைப் பிரதேசத்தில் சுமார் 1,700 ஏக்கர் காணியில்; நெற்செய்கை பண்ணப்பட்டிருந்தது. அண்மையில் பெய்த மழையால் அவை நீரில் மூழ்கி முற்றாக அழிந்துள்ளது. இதனால்,  தங்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக தாம் பெற்ற கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.  

இந்த விவசாயத்தை நம்பி வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்ட இறுதியில், நட்டஈடு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரை கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எச்.கனியிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வழங்கிவைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .