2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நெல் விலை குறைவால் விவசாயிகள் கவலை

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் இம்முறை சுமார் இரண்டு இலட்சம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தெரிவித்தார்.

தேசிய நெல் உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் பங்களிப்புச் செய்யும் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற் செய்கையை அண்மையில் பெய்த பெரும் மழை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், கபிலநிறத்தத்தி நோய்த் தாக்கம், கழுத்தழுகல் பங்கசு நோய் ஆகியவற்றின் காரணமாக நெற்செய்கை பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையிலேயே, அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளது. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில், பாலமுனை போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை அறுவடைக் காலத்தை அண்மித்த நிலையில் உள்ளன. 

தற்போது இடம்பெற்று வரும் அறுவடையின்போது ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 40 மூடைகள் நெல் கிடைத்து வருவதாகவும், நெல்லின் விலை நாளாந்தம் இம்மாவட்டத்தில் படிப்படியாக குறைவடைந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அறுவடையின் ஆரம்ப நாள்களில் 65.5 கிலோகிராம் எடையுள்ள நெல் மூடையொன்று 3,500 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நெல் வியாபாரிகளின் செயற்பாட்டால் நெல்லின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் குறிப்பிடும் விவசாயிகள், தமது நெல்லை உத்தரவாத விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .