2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீர்ப்பாசனத்திட்டங்களை விரைவுபடுத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு கோரும் தனிநபர் பிரேரணையை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக அம்மாகணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மத்திய அரசாங்க நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான நீர்ப்பாசனக்குளங்கள், வாய்க்கால்கள் மற்றும்  பாய்ச்சல், வடிச்சல் திட்டங்களுக்கு அத்திணைக்களத்தின் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  

இதேவேளை, கிழக்கு மாகாண நீர்;ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான நீர்ப்பாசனத் திட்டங்களைச்  செயற்படுத்துவதற்கு போதிய இயந்திரங்கள் அத்திணைக்களத்திடம் இல்லை.

ஆகவே மத்திய, மாகாண நீர்ப்பாசனத் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளதன் காரணமாக இவற்றை அபிவிருத்தி செய்வதால், இம்மாகாணத்தில் உள்ள விவசாயக் குடும்பங்களின் வருமான அதிகரிப்புக்கு உறுதுணையாக அமையும்' என்றார்.

'அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கச்சேரியில் 11.01.2016 அன்று நடைபெற்றபோது, மத்திய அரசாங்க நீர்ப்பாசன, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்களுக்குச் சொந்தமான இயந்திரங்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை கிழக்கு மாகாணசபையிடம் பெறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசாங்க நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச்; சொந்தமான இயந்திரங்களை கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் கிழக்கு மாகாண நீர்ப்பாசனத்  திணைக்களத்துக்குச் சொந்தமான இயந்திரங்களை மத்திய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் மத்திய அரசாங்க நீர்ப்பாசனத் திணைக்களமும் மேற்கொள்ள வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .