2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நுளம்புகள் பரவும் வகையில் இடங்களை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 28 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்; டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் இடங்களை வைத்திருப்போர் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்கள் ஒருவார காலத்துக்குள் அவற்றைத் துப்புரவு செய்ய வேண்டுமெனவும் துப்புரவு செய்யத் தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

கல்முனை வடக்கு, தெற்கு மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதிவரை டெங்கொழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்; டெங்கொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், கிராமிய சிவில் பாதிகாப்புக்குழு உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளனர்.

மேலும், டெங்கொழிப்பு நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளதுடன், வீடுகளில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நுளம்புகள் பெருகாதவாறு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சூழலில் நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப்படுத்த வேண்டும் அல்லது நீர் தேங்கியுள்ள இடங்களில் பூச்சிகொல்லி மருந்து தெளித்தல் வேண்டும். தென்னம் குறும்பைகள், யோகட் கப்கள், வெற்றுப்போத்தல்கள், டயர்கள், பொலித்தீன்கள் போன்றவை முறையாக அகற்றப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்;.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .