2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நாவிதன்வெளி விவசாயிகளுக்கு முன்னுரிமை இல்லையென குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரசாங்க நெல் களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதன்போது, நாவிதன்வெளி கமநலசேவைப் பிரிவு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவ்விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

இந்தக் களஞ்சியசாலையில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.  நாவிதன்வெளி கமநலசேவைப் பிரிவிலுள்ள விவசாயிகளுடன், ஏனைய கமநலசேவை பிரிவுகளுக்குட்பட்ட விவசாயிகள் பலரும் நெல் சந்தைப்படுத்துவதற்காக இங்கு வந்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் வாகனங்களில் நெல்லை ஏற்றிக்கொண்டு வரிசையாக சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில், தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை உரியவேளையில் அரசாங்க உத்தரவாத விலைக்கு விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவ்விவசாயிகள் கூறினர்.

இந்த விடயம் தொடர்பில் நாவிதன்வெளி கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வி.விநோதனிடம் கேட்டபோது, 'உரமானியம் பெற்றுக்கொண்ட ஒழுங்கில்  விவசாயி ஒருவரிடமிரு;நது 2,000 கிலோ நெல் கொள்வனவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை எமது கமநலசேவைப் பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். மேலும், ஏனைய கமநலசேவைப் பிரிவுகளிலுமுள்ள விவசாயிகளும் இந்தக் களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்துவதற்காக வந்துள்ளனர். இதனால், விவசாயிகள் தங்களுடைய நெல்லுடன் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.

நாவிதன்வெளி விவசாயிகளின் நன்மை கருதி அவர்களின் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அக்களஞ்சியசாலையில் வேறு இடமொன்றை ஒதுக்குமாறு  உரியவர்களுடன் கேட்டுக்கொண்டுள்ளதாக நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர் சு.கரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .