2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொத்துவிலுக்கு குடிநீர் விநியோகம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 78 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்கான வேலைத்திட்டம் பூர்த்தியாகியுள்ளதால், எதிர்வரும் 16ஆம் திகதி முதல் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது என அப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸீத், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொத்துவில், நாவலாறுக் கிராமத்தில் 04 குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு அக்குழாய் கிணறுகளுக்கு ஹெடஓயா நீர்பாசனக்குளம் மூலமாக நீர் கொண்டுசெல்லப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.

நாள் ஒன்றுக்கு 3,000 கன அடி நீர் விநியோகிக்க முடியும் என்பதுடன், இதன் மூலம் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மை அடையவுள்ளனர்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பொத்துவில், நாலாறுக் கிராமத்தில் அமைக்கப்பட்ட குழாய்க்கிணறுகள், பழுதடைந்தமையால்குறைந்தளவு குடிநீர் கிடைத்ததால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.

குறிப்பாக செங்காமம், இன்ஸ்பெக்டெர் ஏற்றம், உல்ல ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பாரிய சிரமத்தை எதிர்நோக்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .