2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மடிக்கணினி, இலத்திரனியல் அட்டை திருடியவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மடி கணினி,இலத்திரனியல் அட்டை ஆகியவற்றை திருடிய நபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நிதிமன்ற பதில் நீதிபதி எஸ்.ஏ.ஆர்.அகீலா நேற்று  சனிக்கிழமை உத்தரவிட்டார்.

மூதூர் பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

அவரிடமிருந்து மடிகணணியையும்,இலத்திரனியல் அட்டையையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று 6ஆம் குறிச்சி ஹாஸீம் ஆலிம் வீதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இரவு  மடிகணணியையும் இலத்திரனியல் அட்டையையும் கொள்ளையிடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொள்ளையில் ஈடுபட்டவர் இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தி அட்டாளைச்சேனையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று வங்கியின் ஏ.ரி.எம் இல் இருந்து பணத்தை எடுத்த நபரின் புகைப்படத்தை வங்கி கமராவில் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து,மாளிகாவத்தையில் வைத்து குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று -2 ஆம் குறிச்சி உடையார் வீதியில் உள்ள வீடென்றில் நகை கொள்ளையிடப்பட்டமை மற்றும் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் உள்ள எரிபொரள் நிரப்ப நிலையத்தில் பணம் கொள்ளையிடப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர் எனவும் இவர்களுக்கும் மடிகணணி ,இலத்திரனியல் அட்டை திருடிய நபருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதுவும்  பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .