2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'மாணவர்கள் விளையாட்டிலும் அக்கறை காட்ட வேண்டும்'

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

விளையாட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்த்து மன அழுத்தத்தைக் குறைத்து நட்பை மேலோங்கச் செய்யும். எனவே, மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவதைப் போன்று விளையாட்டிலும் அக்கறை காட்ட வேண்டும் என கல்மு னை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலயத்தின்  முஸ்லிம் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா நேற்று (16) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக் கல்விப்பணிப் பாளராகப் பதவியேற்றுள்ள ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் மேலும் உரையாற்றுகையில்,

புதிதாகப் பதவியேற்றுள்ள எமது கல்வி வலயத்தின் முஸ்லிம் கோட்டக்  கல்விப் பணிப்பாளர் எதிர்காலத்தில் முஸ்லிம் கோட்டத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் ஏனைய விடயங்களையும் மிகவும் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .