2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மினி ஒலிபெருக்கிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சபையின் ஊடீபு 2015 செயற்திட்ட நிதி ஒதுக்கீட்டில் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு மினி ஒலிபெருக்கிகள் வழங்கும் நிகழ்வு இன்று (20) வெள்ளிக்கிழமை காலை காரைதீவு சண்முகா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக அம்பாறை மாவட்டக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொணடார்.  

இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர்,

'கிழக்கு மாகாணத்தின் மூன்று மாட்டங்களிலும் இருந்து 215 பாலர் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திருகோணமலை மாவட்டத்தில் 55 பாலர் பாடசாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 70 பாலர் பாடசாலைகளும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 90 பாலர் பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் மிக கூடுதலான பாலர் பாடசாலைகள் அம்பாறை மாவட்டத்திலேயே காணப்படுகின்றன.

பாலர்களின் அறிவு விருத்தியை மென்மேலும் அதிகரிக்கச் செய்வது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. அதனை மையப்படுத்தி பாலர்களின் விளையாட்டு செயற்பாடுகளோடு இந்த ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்தி அவர்களின் செயற்திறன்களை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்ற நோக்கில், மாகாண சபை ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து இன்று சி.பி.ஜி 2015 செயற்திட்ட நிதி ஒதுக்கீட்டில் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு இந்த மினி ஒலி பெருக்கியை வழங்கி வருகின்றோம் என்றார்.

இதன்போது சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கு கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டி.டி.மெத்தானந்த, சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக அம்பாறை மாவட்டக் காரியாலயத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .