2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'மார்பக புற்று நோய் சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படும்'

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாட்டத்திலுள்ள சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்களில் மார்பக புற்று நோய் சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைஷால் காசிம் தெரிவித்தார்.

மார்பக புற்று நோய் பற்றிய கருத்தரங்கு சனிக்கிழமை (14) நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் டொக்டர் ஜப்பார் சாலி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் பெண்கள் மத்தியில் மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் இவ்வாறான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள மொடிரெப்ஸ் பிரைவேட் லிமிட்டட்டை பாராட்டுகின்றேன்.

மார்பக புற்றுநோய் தொடர்பாக கண்டறியும் கருவிகளை அம்பாறை மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்தியதிகாரி காரியங்களுக்கு வழங்குவதற்கு எதிர்வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியலிருந்து கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .