2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'முஸ்லிம் சமூகத்தின் பறிபோன காணிகள் வழங்கப்படாமை ஏமாற்றம் அளிக்கிறது'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

முஸ்லிம் சமூகத்தின் பறிபோன காணிகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்கப்பட்டு வழங்கப்படுமென்று அச்சமூகம் எதிர்பார்ப்புடன் இருந்தபோதும், அது இதுவரையில் மேற்கொள்ளப்படாமை ஏமாற்றம் அளிப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை  ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், 'எமது நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கு பங்களிப்புச் செய்த தமிழ்ச் சமூகம் விழிப்புடன் செயற்;பட்டு, அரசியல் பேரம் பேசும் நிலைமையைப் பயன்படுத்தி இழந்தவைகளைப் பெற்றுவருகின்றமை மகிழ்ச்சியாகவுள்ளது.  தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இழந்த காணிகளை படிப்படியாக பெற்றுக்கொடுக்கின்றமையை பாராட்டுகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'நாட்டின் பாதுகாப்பு முக்கியமானது. அதற்காக தேவைக்கு அதிகமாக மக்களின் காணிகளை படையினர் வைத்துக்கொள்ள முடியாது. பாதுகாப்புப் படையினருக்கு அவசியமாகத் தேவைப்படும் காணிகளை வழங்கிவிட்டு மீதிக் காணிகளை இங்குள்ள முஸ்லிம், தமிழ், சிங்கள அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு வீடமைப்புத்திட்டம் அமைத்து வழங்குவதற்கான ஏற்பாட்டை கிழக்கு மாகாணசபையும் மாகாணக் காணி அமைச்சரும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் முஸ்லிம் மக்கள் பரம்பரையாக விவசாயம் செய்துவந்த 520 ஏக்கர் விவசாயக்காணி விடுவிக்கப்பட வேண்டும்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் காணிகளை விடுவிப்பதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும், இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .