2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வுச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சமூக மட்ட வீதி விபத்துகளை குறைக்கும் நோக்குடன் கல்முனை சர்வோதய மாவட்ட வள அபிவிருத்தி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிறுவர் வீதி விபத்துகள்' எனும் தொனிப்பொருளில் ஒருநாள் பயிற்சி செயலமர்வு நேற்று வியாழக்கிழமை காரைதீவு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இங்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் உரையாற்றியபோது, 'அம்பாறை மாவட்டத்தில் சிறுவர்கள் அதிகளவில் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதுடன், விபத்துகளையும் சந்திக்கின்றனர். இவர்கள் அதிகமாக விபத்துகளுக்கு  உட்படுவது ஏனென்றால், அவர்களுக்கு வீதி ஒழுங்கு முறைகள் பற்றி தெளிவின்மையே காரணமாகும்.

சிறுவர்களுக்கு வீதி போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய தேவைப்பாடு உள்ளது.  இதற்கான முன்னெடுப்புகளை நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே, விபத்துகளை குறைக்கலாம'; என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .