2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நீதிமன்றிலிருந்து திரும்பும் வழியில் கைதிகள் தப்பியோட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.எஸ். வதனகுமார்)

கல்முனை சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் இன்று மாலை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு திரும்பி வரும் போது   தப்பிச் சென்றுள்ளனர்.

பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு கைதிகள், கல்முனை சிறைக்கூட உத்தியோகஸ்தர்களால் அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டு, திருப்பி அழைத்து  வரும் போது அட்டளைச்சேனை பாலமுனையில் வைத்து  தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தமிழ் மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்தன.

கொழும்பிலிருந்து அண்மையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இவர்கள்,  இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு சிறைச் சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு கல்முனை சிறைக்கூடத்தில்  ஒப்படைக்கப்பட்டனர்.

 அதன்பின் கல்முனை சிறைச்சாலை     உத்தியோகத்தர்கள் அறுவரால் ஏனைய இரு கைதிகள் சகிதம் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லபட்டு  ஆஜர்படுத்தப்பட்டு  திருப்பி அழைத்து  வரப்பட்ட போதே  குறித்த இரண்டு கைதிகளும்  அட்டளைச்சேனை பாலமுனையில் வைத்து விலங்குகளை கழற்றிவிட்டு பாய்ந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X