2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொதுமக்களுக்கு எதிராக அரச அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.சரவணன்)

அம்பாறை கரையோரப் பிரதேசங்களிலுள்ள அரச அலுவலகங்களுக்கு தமது பிரச்சனைகளை முறையிடச் செல்லும் பொது மக்களுக்கு எதிராக அலுவலகங்களில் சில உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களில் தம்மை மிரட்டியதாக முறைப்பாடு செய்யும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொது மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய அரச பணிகள் கரையோரப் பிரதேசங்களிலுள்ள அரச அலுவலகங்களில் இழுத்தடிக்கப்படுகின்றன. கடமை நேரத்தில் தமது சொந்த அலுவல்களை மேற்கொள்ள உத்தியோகத்தர்கள் வெளியில் செல்கின்றனர். இவர்கள் சந்தை, வங்கி, வயல் என அலைந்து திரிவதுடன் அலுவலக நேரத்தில் முச்சக்கரவணிகள் ஓடும் நிகழ்வுகளும் இடம்பெறுவதாகவும் அம்மக்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக மக்கள் தமது தேவைகளை அரச அலுவலகங்களில் செய்து கொள்ள முடியாத நிலையில், அவர்களிடம் இது குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தால் அவர்கள் பொது மக்களுடன் முரண்படுகின்றனர். அதன் பின்னர் தம்மை மிரட்டுவதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்கின்றனர். இது தொடர்பாக பொது மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில், "இவ்வாறான முறைப்பாடுகள் இப்பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் கடமையாற்றும் சில அரச உத்தியோகத்தர்களால் கிடைக்கப்பெறுகின்றன. இது உண்மையில் வருந்தத்தக்க விடயம்.

அரச உத்தியோகத்தவர்கள் மக்களது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதுடன், அவர்களது பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டியது அவர்களது தலையாய கடமையாகும். இதனை விடுத்து தொழில் நிலையங்களில் பொது மக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வது பொருத்தமற்ற நடவடிக்கையாகும்" என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .