2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உளவளம் குன்றியவர்களை ஒதுக்கி வைப்பது கவலைக்குரியது

Super User   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)  

சர்வதேச உளநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு அம்பாறை அம்பகஹவெல பெண்கள் அபிவிருத்தி அமைப்பு ஒழுங்கு செய்திருந்த உளவளம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை பாராமரிப்பவர்களுக்காக உதவி வழங்கும் நிகழ்வும் இன்று அமைப்பின் தலைவி  பிரேமாவதி தலைமையில் அம்பகஹவெலயில் இடம்பெற்றது.

எமது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள நலம் குன்றியோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.



"அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான இந்த ஊரில் 15 இற்கும் அதிகமான உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் போது மாகாண ரீதியில் இதன் தொகை பன்மடங்காக இருக்கலாம்.

எமது சமூகத்தில் உளநலம் குன்றியவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து அவர்களுக்கு  சிகிச்சை வழங்காமல் இருப்பது மிகவும் கவலை தரக்கூடிய விடயமாகும்" என பிரேமாவதி தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .