2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

ஆயுர்வேத வைத்தியத்துறையினை கிராமப்புற மக்களுக்கு பிரபல்யப்படுத்தும் நோக்கில் நிந்தவூர் அரசாங்க கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமான மத்திய முகாமில் இலவசமாக நடமாடும் ஆயுர்வேத வைத்தியமுகாமினை இன்று ஒழுங்கு செய்துள்ளது.


ஆயுர்வேத வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.நக்பரின் வழிகாட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நடமாடும் வைத்திய சேவையின்போது பெருந்தொகையான நோயாளர்கள் வந்து சிகிச்சை பெற்றனர்.


ஆங்கில முறையிலான வைத்திய சேவைக்காக பழக்கப்பட்டிருந்த மக்களை பக்கவிளைவு எதுவுமற்ற இயற்கை முறையிலான சிகிச்சைக்கு மாற்றவேண்டிய பாரிய கடமையொன்று ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கு உள்ளதாக டாக்டர் கே.எல்எம்.நக்பர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .