2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆற்று மீன்கள் திடீரென உயிரழப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 03 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றிலுள்ள மீன்கள் திடீரென உயிரிழந்து நீரில் மிதக்கத் தொடங்கியுள்ளன. இந்த திடீர் நிகழ்வுக்கான காரணம் என்னவென்று இதுவரை சரியாகக் கண்டறியப்படவில்லை.

ஆயினும்இ இயற்கை மாற்றம் காரணமாகஇ மீன்கள் இவ்வாறு திடீரென இறந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மீன்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதன் காரணமாகஇ இந்த ஆற்றில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  மேற்படி நிலையினால்,அப்பிரதேச சுற்றாடல் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும்,  இதனால் பொதுமக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி  வருவதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி கோணாவத்தை ஆறு, சுமார் 04 கிலோமீற்றர் நீளமும், 350 மீற்றம் அகலத்தினையும் கொண்டதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .