2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குருந்தயடி சுனாமி வீட்டுத்திட்டத்தில் கழிவு நீரகற்றலில் குறைபாடு

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அஸீஸ்)

குருந்தயடி சுனாமி வீட்டுத்திட்டத்தில் கழிவு நீரகற்றல் முறைமையில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட குருந்தையடி கிராமத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு 'பினிஸ்' செஞ்சிலுவை சங்கம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து இரண்டு மாடி தொடர் வீட்டுத் தொகுதியினை அமைத்துக் கொடுத்தனர்.

இருந்தும் மலசல கழிவுநீரகற்றல் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த வீட்டுத் தொகுதியில் பல இடங்களிலும் இருந்து கழிவு நீர் வெளியாகி தேங்கி நிற்பதால் அங்கு குடியிருக்கும் மக்களின் போக்குவரத்து சூழலை பாதித்துள்ளதுடன் துர்நாற்றத்துடனான நோய்கள் பரவும் அபாய நிலையும் காணப்படுகிறது.

'இந்நிலை தொடர்பாக நாங்கள் பிரதேச செயலாளரிடமும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் முறையிட்ட போதும் இன்னும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லை' எனக இந்த வீட்டுத்திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவக்குழு உறுப்பினர்களும், குடியிருப்பாளர்களும் கூறுகின்றனர்.

இது தொடர்பாக கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லபநாதனிடம் கேட்ட போது,

தாங்கள் இப்பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி வருகிறோம். இதனை நிவர்த்தி செய்ய சுமார் 50 லட்சம் ரூபா செலவாகலாம் எனக் கருதப்படுவதனால், இந்த வீட்டுத்திட்டத்தை அமைத்துத் தந்த 'பினிஸ்' செஞ்சிலுவை சங்கத்தை தொடர்பு கொள்ள உள்ளோம்.

அதுவரை தற்காலிகமாக பெரிய குழி ஒன்றினை அமைத்து கழிவு நீரை அகற்ற உள்ளோம் எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .