2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அக்கரைப்பற்றில் நடைபாதை கடைகள் உடைப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் நடைபாதைகளில் உள்ள கடைகள் மற்றும் வியாபாரம் செய்வோரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையினை  அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பிரதான வீதிகளின் நடைபாதைகளில் கடை உரிமையாளர்கள் மற்றும் வீதி வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து  வருகின்றனர்.

இதனால் பிரதேசத்தில் வீதி விபத்துக்கள்  மற்றும் வாகன நெரிசல்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் நடைபாதையூடாக பொதுமக்கள் செல்ல முடியாது பல்வேறு அசௌகரியங்களை  எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு வீதி நடைபாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீதி வியாபாரிகளை உடனடியாக தடை செய்து அகற்றும் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வீதிகளில் குப்பை போடுவோர்  மற்றும் வீதிகளை  அசுத்தம் செய்வோர்களுக்கு எதிராக எதிர்வரும் வாரங்களிலிருந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

இந்நடவடிக்கையினால் அக்கரைப்பற்று பொத்துவில் வீதி, கல்முனை வீதி, சாகாம வீதி, அம்பாறை வீதிகளின் நடைபாதைகளினூடாக பொதுமக்கள் மிக இலகுவாக பிரயாணிக்கக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X