2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒலுவில் துறைமுக வேலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில்

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒலுவில் துறைமுக வேலைத்திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது.

தற்போது கல்முனை அக்கரைப்பற்று வீதியிலுள்ள பிரதான நுழைவாயில் வீதி செப்பனிடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாண பணிகள் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பூர்த்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் சுற்றாடலில் நிலவிய சில பிரச்சினைகள் காரணமாக நிர்மாணப் பணிகள் தாமதமடைந்தன.

டென்மார்க் அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இத்துறைமுகத்திற்கு 7000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் மீன்பிடி துறைமுகமாகவும் வர்த்தக துறைமுகமாகவும் செயற்படவுள்ளது.




 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .