2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'தழலாடி வீதி' கவிதை நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆசிரிய மாணவர் கவிஞர் கந்தையாக கணேஷமூர்த்தியின் 'தழலாடி வீதி' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை காலை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

ஆசிரியர் கலாசாலையின் கலை, கலாசார மன்றத்தின் தலைவரும் ஆசிரிய மாணவருமான எச்.கே.எம். நியாஸ் மௌலவியின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், முதன்மை அதிதியாக கலாசாலையின் அதிபர் எம்.எஸ். அப்துல் ஹபீழ் கலந்துகொண்டார்.

பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் ரமீஸ் அப்துல்லா மற்றும் சிறப்பு அதிதியாக அட்டாளைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.சி.எம். தாஜுதீன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

நிகழ்வில், கலாபூஷண் ஆசுகவி அன்புடீன், கலாசாலையின் பிரதியதிபர் எம்.ஐ. அப்துல் லத்தீப்,; மற்றும் பெருவெளி சஞ்சிகையின் ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றிய அதேவேளை, மூத்த பத்திரிகையாளர் வி.பி. சிவப்பிரகாசம் முதற்பிரதியினைப் பெற்றுக்கொண்டார்.

நூலாசிரியர் கவிஞர் கணேஷமூர்த்தி  நுவரெலியா மாவட்டத்திலுள்ள ரம்பொடை பெதமுல்லை எனும் இடத்தைச் சேர்ந்தவராவார். இவர் கலந்த பல ஆண்டுகளாக, கவிதைத் துறையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .