2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் பாரிய கடலரிப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் அண்மைக்காலமாக பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன.

நிந்தவுர், காரைதீவு, சாய்ந்தமருது, ஒலுவில், மாளிகைக்காடு, கல்முனை, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை போன்ற பிரதேசங்களிலுள்ள கடலோர நிலப்பரப்புகளை நாளுக்கு நாள் கடல் தனதாக்கிக் கொண்டு வருகின்றது. இதனால் கடற்கரையை அண்டி வாழும் மக்களும் மீனவர்களும் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படுவதனாலும் கடல் மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடருவதனாலும் கடலரிப்பு அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் கடற்கரையோரங்களில் வளர்ந்திருந்த அடம்பன்கொடி, இராவணன் மீசை, எழுத்தாணிப்பூண்டு மற்றும் தாழை போன்ற மரங்கள் அழிவடைந்த நிலையில் இவை இதுவரை மீள நடுகைக்கு உட்படுத்தப்படவில்லை.

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலை அண்டியுள்ள கடற்கரை பிரதேசத்தில் பாரிய பாறாங்கற்கள் போடப்பட்டிருந்த போதிலும் அதனையும் தாண்டி கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறான கடலரிப்பு தொடருமாயின் கடற்கரைப் பிரதேசமொன்று எதிர்காலத்தில் இல்லாமல் போவதுடன் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் தங்களது வள்ளங்களையோ இயந்திரப்படகுகளையோ தோணிகளையோ நிறுத்தி வைப்பதில் பலவிதமான கஸ்டங்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற அச்சம் நிலவுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • m.a,asfak ahamed Monday, 06 December 2010 04:27 AM

    இப்படியே போனா என்னதான் நடக்கப்போகுதோ

    Reply : 0       0

    முஹம்மது ஜபறுல்லாஹ் Monday, 06 December 2010 10:53 PM

    இயற்கை மறுத்தல் காரணமாகவும் மனிதனின் சுயநல போக்கின் காரணமாகவும் ஏற்படும் கடலரிப்பை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். தங்களதும் மீனவர்களதும் அபிவிருத்தியில் அபார அக்கறை செலுத்தம் மீனவ சங்கங்கள், சமாசங்கள் கரையோர பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
    மற்றும் மனிதசுயநலம் காரணமாக நிகழும் சட்டவிரோத மணல் அகழ்வு பற்றி அவ்வவ்போது மீனவ சங்கங்கள், சமாசங்கள் என்பவற்றால் போலீஸ் நிலையங்களில் முறையீடு செய்த போதும், ஏன், பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட போதிலும் அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
    கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் கடற்றொழில் மாவட்ட அலுவலகங்கள், மாவட்ட செயற்திட்ட முகாமைத்துவ பிரிவு (இபாட்), கரையோர பாதுகாப்பு திணைக்களம், பிரதேச செயலகம் போன்றன கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த, விருத்தி செய்ய செயத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். - முஹம்மது ஜபறுல்லாஹ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .