2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆயிஷா பாலிக்கா மகாவித்தியாலயத்தில் மீள் சுழற்சி பொருட்களை கொள்வனவு செய்யும் திட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில் யுனெப்ஸ் நிறுவனம் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ் மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் மீள்சுழற்சி சந்தை எனும் தலைப்பில் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிக்கா மகாவித்தியாலயத்தில் மீள் சுழற்சி பொருட்களை கொள்வனவு செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.கையும் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யுனெப்ஸ் திட்ட முகாமையாளர் சிலியா மார்க்காஸ், திட்ட ஆலோசகர் சோனியா, திட்ட தொடர்பாடல் மேற்பார்வை உத்தியோகத்தர் ஆர். சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மீள் சுழற்சிப் பொருட்களை சந்தைப்படுத்துவதை ஆரம்பித்துவைத்தனர்.

இத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவறவையாக இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், பிரதேச சபைகளிலும், வீடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .