2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயம் புதிய இடத்தில்

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ள அட்டாளைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பணிகள் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வைத்திய காரியாலயத்தின் சேவையினைப் பொதுமக்கள் தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அட்டாளைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ. நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவில் இயங்கி வந்த மேற்படி காரியாலயம் தற்போது, அட்டாளைச்சேனை 01ஆம் பிரிவில் கிழக்கு மாகாண சபையின் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வந்த கட்டிடத்துக்கு கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.

தமது வைத்திய காரியாலயத்தின் இடமாற்றம் மற்றும் செயற்பாடுகள் குறித்து டாக்டர் நஸீர் மேலும் தெரிவிக்கையில்ளூ

"எமது கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயமானது கால்நடை உற்பத்தியில் கூடிய கவனம் எடுத்து வருகின்றது. அதேவேளை, பொதுமக்களுக்குத் தேவையான சிறந்த இன கால்நடைகளை நாம் தெரிவு செய்து வழங்கியும் வருகின்றோம்.

மேலும், பொதுமக்கள் தமது கால்நடைகளுக்குத் தேவையான அனைத்துவித வைத்திய சேவைகளையும் எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும். மட்டுமன்றி, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்ப்பரம்பல் குறித்தும் நாம் அவதானமாக இருக்கின்றோம். அவ்வாறு நோய்கள் ஏற்படும் பட்சத்தில், அவை பரவாமல் தடுப்பதற்குரிய அனைத்து திட்டங்களும் எம்மிடம் உள்ளன" என்றார்.

 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X