2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி தலையிட்டதனால் இஸ்லாமாபாத் மக்களின் நீர் பிரச்சினை தீர்ந்தது

Super User   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி தலையிட்டதனால் இஸ்லாமாபாத் மக்களின் நேற்று செவ்வாய்க்கிழமை நீர் பிரச்சினை தீர்ந்தது.

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட மக்களது நீர் பிரச்சினை தொடர்பாக அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிரதேச செயலக முற்றுகை  போன்றன நடைபெற்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இதேவேளையில் நேற்று நன்பகல் 12.45 மணியளவில் முற்றாக நீரை துண்டிப்;பதற்கு நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையினர் வந்த போது  மக்கள் ஒன்று கூடி நீரை வெட்டுவதற்குப் பதிலாக எங்கள் தலையை வெட்டுங்கள் என கூறி அவ்விடத்தில் திறண்டதனால் அதிகாரிகள் கல்முனை பொலிஸிலில் முறைப்பாடு செய்தனர்.

பிற்பகல் பொலிஸாருடன் நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளும் வந்து நீரை துண்டிக்க முற்பட்ட போது தொலைபேசியில் நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு  சபையின் பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி பேசியதன் பின் அவ்வதிகாரிகளும் பொலிசாரும் அவ்விடத்தலிருந்து அகன்று சென்றனர்.

இது தொடர்பாக நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபையின்  பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது,

பிரச்சினை எமக்கும் மக்களுக்கும் அல்ல அவர்களுக்கு இந்த வீட்டுத்திட்டம் அமைத்த காலம் தொடக்கம் சட்டப்படி முடிந்த உதவிகளை எமது சபை செய்துள்ளது.

அதே போல் இருக்கும் நிலுவையை கட்ட வேண்டியதும் அவர்களுடைய கடமை. இதற்குள் வேறு பிரச்சினை இருப்பதை எமது அதிகார சபைக்குச் சொல்லுவது பொருத்தமற்றது
இருந்தும் மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டிக் கொண்டதெற்கும் அமைய ஒரு வாரம் தவணை கொடுத்துள்ளோம்.

அதற்குள் இப்பிரச்சினை திர்க்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது தவிர்க்க முடியாது என்றார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலியிடம் தொடர்பு கொண்ட போது,

சட்டப்படி ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு அவ்வமைப்பிடம் மக்கள் இதற்கான பணத்தையும் வழங்கியுள்ளனர். அவர்களும் அப்பணத்தை கட்டியும் உள்ளனர் அதற்குள் நிலுவையும் ஏற்பட்டுள்ளது.

இதற்காக மக்களை தண்டிக்கக்கூடாது அது முறையும்மல்ல சம்மந்தப்பட்ட நிருவாத்தைத்தான் கேள்வி கேட்க வேண்டும்.

மக்களை பாதிக்கும் எந்த நடவெடிக்கைகளையும் எடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்கமாட்டாது. விரைவில் சம்மந்தப்பட்ட இருசாராரையும் நான்  சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X