2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

துறைநீலாவனை மக்கள் வெள்ளத்தில் பாதிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த துறைநீலாவணைப் பிரதேசத்தின் பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து 65 குடும்பங்களைச் சேர்ந்த 226 பொதுமக்கள் தமது வசிப்பிடங்களை விட்டும் வெளியேறி இரண்டு நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்எருவில்பற்று – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் சுமார் 1800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பிரதேசம் 04 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்எருவில்பற்று – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2957 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 53 பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா தெரிவித்தார். இவர்கள் அனைவரும் தற்போது 23 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பிரதேச செயலாளர் பிரிவின் துறைநீலாவணை, ஓந்தாச்சிமடம், கோட்டக்கல்லாறு, மகிழூர்முனை, மாங்காடு, குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, செட்டிப்பாளையம், தேத்தாதீவு மற்றும் எருவில் உள்ளிட்ட 13 பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்எருவில்பற்று – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில்  45 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X