2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வன்முறைகளில் ஈடுபட்டால் அது தேர்தலையும் வேட்பாளர்களையும் பாதிக்கும்: பீ.தயாரட்ன

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

 

தேர்தல் நீதியானதும், நியாயமானதுமாக அமைய வேண்டுமெனில் பாரிய பொறுப்பினை அனைத்து வேட்பாளர்களுக்கும் உரியதாகும். வேட்பாளர்கள் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்வதன் மூலமே மக்களின் செல்வாக்கினைப் பெறலாம். மாறாக வன்முறைகளில் ஈடுபட்டால் அது தேர்தலையும், உங்களையும் பாதிக்கும் ஏன சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விசேட கூட்டம் நேற்று சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்னவின் அம்பாறை இல்லத்தில் நடைபெற்றபோது இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு வேட்பாளன் மிகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற வேண்டும் என நினைக்காமல் கூடுதலான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் அக்கரையும், ஆர்வமும் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி நாட்டை அபிவிருத்தி செய்து வறுமையை ஒழிக்கும் திட்டத்திற்கு எடுக்கும் முயற்சிக்கு இத்தேர்தலில் அனைத்து மக்களையும் வாக்களிக்க அனைத்து வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம, ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் மற்றும் வேட்பாளர்களும் கவந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .