2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்துடன் இணைந்து இரண்டு மாதங்களுக்குள் முஸ்லிம் காங்கிரஸ் பல விடயங்களை சாதித்துள்ளது: ஹரீஸ் எம

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட இரண்டு மாதங்களுக்குள் பல முக்கிய விடயங்களை சாதித்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

உதாரணமாக, சம்மாந்துறை பிரதேசத்துக்கு சுமார் 50 வருட கால தேவையாக இருந்து வந்த நீதவான் நீதிமன்றத்தை எமது தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அரசாங்கத்தில் இணைந்து பெற்றுக் கொடுத்திருக்கின்றார் என அவர் குறிப்பிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் பகிரங்கக் கூட்டம் – அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,

அமைச்சர் அதாவுல்லா அமைச்சரவையில் இருக்கின்ற வேளையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்ட மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறி, அதை அரசாங்கம் கைவிடும் நிலையை ஏற்படுத்தியவர் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தான்.

உள்ளூராட்சி சபையென்பதை சிறியதொரு விடயமாகக் கருதி விட வேண்டாம். உள்ளூராட்சி சபையொன்றுக்கு நானும் தலைவராக இருந்திருக்கின்றேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான சக்தியை விடவும் உள்ளூராட்சி சபையொன்றுக்கான பலம் அதிகமாகும் என்றார்.

இதன்போது, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஏ.எல்.எம். நஸீர் உள்ளிட்ட வேட்பாளர்கள் தமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை  மக்களுக்கு எடுத்துக் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .