2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முன்னாள் அமைச்சரின் மலைக்கோட்டை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பண்டைய காலங்களில் மன்னர்களும்  மந்திரிகளும் மலைகளில் தமது கோட்டைகளையும் மாளிகைகளையும் உருவாக்கி வாழ்ந்ததாக நாம் வரலாற்று நூல்களில் படித்திருக்கின்றோம். ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டில் மலையொன்றை மிக அழகிய கோட்டையாக மாற்றி அதில் தனது ஓய்வு நாட்களைக் கழித்து வருகின்றார் ஒருவர்!

அவர்  முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்.  

இது அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் எனும் பிரதேசத்தின் மதீனாபுரம் எனும் பகுதியிலுள்ள மலைகளில் ஒன்றாகும். இந்த மலை அமைந்துள்ள காணி முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனுக்குச் சொந்தமானதாகும்.

தனது காணியிலுள்ள இந்த மலையை தன்னுடைய ரசனைக்கேற்ப மிக அழகாகவும் அற்புதமாகவும் மாற்றியமைத்திருக்கின்றார் சேகு இஸ்ஸதீன்.

இந்த மலையில் ஏறுவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள படிகள், உட்கார்ந்து பேசுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆசனங்கள், மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ள உயரமான கூரைகள் என  அனைத்துமே, பண்டைய ராஜாக்கள் வாழ்ந்த மலைக் கோட்டைகளில் அமைந்திருந்தவை போல் தோன்றுகின்றன.

இந்த மலையில் இயற்கையாக அமைந்துள்ள இடைவெளிகள் மற்றும் பிளவுகளை வைத்து அழகு நிறைந்த சிறியதோர் பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.  அதேபோல்  மலையின் பிளவுகளை வைத்து சில அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள தனக்கான அறையில் முன்னாள் அமைச்சர் தங்குகின்றார். அந்த அழகிய அறைக்கு கவிதாலயம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அழகுபடுத்தப்பட்ட இந்த நவீன மலையைக் காண தினமும் பொதுமக்கள் இங்கு வந்து போகின்றார்கள்.

இப்போது, அம்பாறை மாவட்டத்தின் ஆச்சரியங்களில்  முன்னாள் மந்திரி வாழும் இந்த மலைக் கோட்டையும் ஒன்றாக மாறியிருக்கிறது.     

                                                                                                                                                                                          


You May Also Like

  Comments - 0

  • Sitheek Monday, 28 February 2011 07:28 PM

    எதற்கும் அரசமரம் இருகிறதா என பாருங்கோ ? தப்பி தவறி பக்கத்துக்கு வளவில் இருந்தால் அமைச்சரின் வீடு பெளத்த ஆலயமாக மாறிவிடும் கவனம் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .