2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நெற்செய்கை நிலங்கள் பயன்பெறும வகையிலான வடிச்சல் அபிவிருத்தி வேலைத் திட்டம் துரிதகதியில்

Super User   / 2011 மார்ச் 04 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள சுமார் 08 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்செய்கை நிலங்கள் பயன்பெறும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடிச்சல் அபிவிருத்தி வேலைத் திட்டம் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

மண் அகழும் - மிதக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த வேலைத் திட்டமானது கடந்த 28 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி மண் அகழும் - மிதக்கும் இயந்திமானது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் அண்மையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த பல ஆண்டுகளாக, சம்புக்களப்பு பகுதியிலுள்ள பல்லாயிரக்கணக்கான நெற்காணிகள் - வடிச்சல் வசதிகள் இல்லாத காரணத்தினால் விவசாயம் மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வடிச்சல் அபிவிருத்தி வேலைத் திட்டம் மேற்ககொள்ளப்பட்டு வருகின்றது.

சுமார் 100 அடி அகலமும், 08 அடி ஆழமும் கொண்டதாக இந்த வடிச்சல் - கால்வாய் அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .