2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பயன்பாடற்று காணப்படும் நாவிதென்வெளி வாராந்த சந்தைக் கட்டிடம்

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மத்திய முகாம் நான்காம் கொலனியில்  யு.எஸ்.எயிட்ஸ் நிறுவனம் வர்த்தக சங்கங்களை அமைத்து சமூகங்களை ஒன்றினைப்பதற்கான திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வாராந்த சந்தைக் கட்டிடம்  மற்றும் பஸ் தரிப்பு நிலையம்
மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேலாகி எவ்வாறான பயன்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கள் எதுவும் இன்றி காடு வளர்ந்துள்ளதுடன் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் துணிகள் காயப்படும் இடமாகவும் ஆடு வளர்ப்பிற்கும்
பயன்படுத்தப்பட்டு வருகின்றது என பிரதேசமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் கீழுள்ள குறித்த வாராந்த சந்தை கட்டிடம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம் ஆகியவை யு.எஸ்.எயிட்ஸ் நிறுவனம் வர்த்தக சங்கங்களை அமைத்து சமூகங்களை ஒன்றினைப்பதும் தேவைகளை புர்த்தி செய்வது மூலமாக
சமூகங்களிடையே சமாதானத்தை கட்டியெழுப்புதல் எனும் திட்டங்களின் கீழ் அமெரிக்கா மக்களால் வழங்கப்பட்ட நிதியுதவியடன் கடந்த 30.11.2007 ம் ஆண்டு பல லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.

குறித்த கட்டிடங்களை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு பல முறை முறைப்பாடு தெரிவித்தும் எவ்விதமான நடைவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள கலையரசனிடம் தொடர்பு கொண்டபோது,

தனக்கு முன்னர் தவிசாளராக இருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பராசாவின் காலத்தில் திட்டமில்லாமல் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தான் பதவியேற்றவுடன் இக்கட்டிடங்களை மக்கள் பாவனைக்கு திறக்க நடைவடிக்கை எடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X