2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பணயகைதியாகிய மாகாண கல்விப் பணிப்பாளர்: சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2011 ஜூன் 14 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார், ஹனீக் அஹமட்)

ஆசிரிய இடமாற்றங்கள் விடயமாக மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமை பணயக் கைதியாக தடுத்து வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பமொன்று இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகப் பிரிவில் இடம்பெற்றுள்ள உள்ளக ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமான கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, அங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினாலேயே மாகாண கல்வி பணிப்பாளரை பணய கைத்தியாக்கிய சம்பவம் அங்கு இடம்பெற்றது. இதன்போது பிரதேச செயலக அலுவலகத்திற்குள் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட்டின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் ஐ.ஏ.ஜப்பார், பிரதேச சபை பிரதித் தவிசாளர் கலீலுர் றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்விமான்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
வருட நடுப்பகுதியில் இடம்பெறும் இவ் இடமாற்றத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படவுள்ளதால் இதனை இடை நிறுத்தி இடமாற்றம் தொடர்பான விதிகளை பரிசீலனைக்குட்படுத்தும் வரை பிறிதொரு தினத்திற்கு இடமாற்றத்தினை அமுல்படுத்துமாறு இங்கு கலந்து கொண்டவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் தனக்கும் இவ் இடமாற்றத்திற்கும் எவ்விதமான சம்பந்தமுமில்லை. இது கிழக்கு மாகாண ஆளுநனர், முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர்களின் உத்தரவின்படியே இடம் பெறுகின்றது என்றும் இந்த இடமாற்றங்களை தான் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாகவும் உறுதியளித்தார்.

அங்கு வந்த இடம்மாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த இடமாற்றங்கள் முறையற்ற முறையில் இடம் பெற்றுள்ளதாகவும் தங்களது வலயத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தபோது அங்கு ஏற்பட்ட கருத்து மோதல்களினால் பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது.

இதன் போது மாகாண கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் சம்பந்தமான முடிவினை தெரிவிக்கும் வரை இங்கிருந்து போக விடமாட்டோம் என ஆசிரியர்கள், பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்து கோசங்கள் எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் ரணகல குழுவினர் சகிதம் அவ்விடத்துக்கு வந்த மாகாண கல்விப் பணிப்பாளர் இரண்டு கிழமைக்கு இந்த இடமாற்ற விவகாரத்தை இடைநிறுத்தி தருவதாக தெரிவித்தபோதும் பாதிக்கப்பட்டவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியாக வலயக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பிழையான தகவல்களினால் இவ்விடமாற்றம் இடம்பெற்றதாகவும் எனவே, இதனை இடைநிறுத்தி வைக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் பணிப்பாளரினால் வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலைந்து சென்றனர்.

இக்கூட்டம் நடைபெற்றவேளையில் பெருமளவிலான பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • amein Thursday, 16 June 2011 01:36 PM

    what should not happen has happened; both parties need to repent for what they committed ; when appointment is made transfer is inevitable; it is true that there are dearth of teachers in some zones. but,far away transfer is not a correct measure. because, cost of living is a vital factor for all. however, sammanthurai society,too need to give little due respect for higher officers,failing which no officers will undertake higher position for want of security,status,dignity,respect etc.etc.

    Reply : 0       0

    vaasahan Sunday, 19 June 2011 02:30 PM

    சென்ற ஆண்டு சம்மாந்துறைக்கு வெளி வளைய ஆசிரியர் நூற்றி ஐம்பது பேர் மாற்றப்பட்டது நீங்கள் சொல்லூம் கல்வி அபிவிருத்தியா. கேட்கப்பாக்க ஆள் இல்லாத ஊரான் என்பதாலா? அந்தத் தொகைதான் இப்போது இங்கு மேலதிகம். உங்களைப் போன்றவர்கள் இருக்கையில் இவர் என்ன இன்னும் ஆயிரம் அதிகாரிகள் தோன்றுவர்.

    Reply : 0       0

    Ism. Najran Friday, 17 June 2011 10:12 PM

    ஏன் சுயநலமாக சிந்திக்கிறீர்கள் !
    இன்று நீங்கள் இவ்வாறு எல்லாம் சிந்திப்பதற்கு உந்துதலாக இருந்தவர்கள் யார்? கடந்த 10, 15 வருடங்களுக்கு பின்னோக்கி சென்று பாருங்கள். வட மாகாணத்திலும் வேறு மாவட்டத்திலும் இருந்து வந்த ஆசிரியர்கள் உங்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் கல்வியை ஊட்டினார்கள் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    கல்வி அமைச்சு வருடந்தோரும் கோடிக்கணக்கில் செலவழிப்பதன் முதன்மை நோக்கம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கில்லை. மாறாக அனைத்து மாணவர்களுக்கும் கல்வி சென்றடைவதற்கே ஆகும்.
    சுயநலவாதிகளே உங்களை நோக்கி எனது ஒரே கேள்வி? கிண்ணியாவில் - 230, மூதூரில் - 160, மட்டகளப்பு மத்தியில் - 159, கல்குடாவில் – 118 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகிறார்கள். அதேவேளை கல்முனையில் - 269, சம்மாந்துறையில் - 266, பட்டிருப்பில் - 82, அக்கரைப்பற்றில் - 59 மேலதிக ஆசிரியர்களும் காணப்படுகிறார்கள். இப் பாரபட்சமிக்க நிலைக்கான தீர்வு என்ன????????

    பல வருட கால யுத்த வாழ்க்கைக்குப் பின் எமது எதிர்கால சமுதாயம் பெறவுள்ள நல்ல கல்வி எதிர்காலத்தை சீர்குலைக்க எவரும் முனையாதீர்கள்.

    Reply : 0       0

    vaasahan Friday, 17 June 2011 05:34 AM

    இந்த இடமாற்றங்கள் சட்ட வரையறைகளுக்குள் நின்று செய்யப்படவில்லை. முதலில் இடமாற்ற சபை கூட்டப்படவில்லை. தீர்மானங்கள் முறைப்படி எடுக்கப்படவில்லை. இத்தகைய சட்டப்படியான முறைகள் தெரிந்த உயர் அதிகாரிகள் மாகான சபையில் நியமிக்கப்படாது அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடும் குறுக்கு மூளைகள் முதலில் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். எதற்கும் ஆர்பாட்டங்களை விடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுக்க முன்வருவதே புத்திசாலித்தனம்.

    Reply : 0       0

    ஆசிரியன் Friday, 17 June 2011 12:13 AM

    உண்மையில் இவ்விடமாற்றத்தால் பாதிக்கப்படப் போவது கிழக்கு மாகாண மாணவர் சமுதாயமும் ஆசிரியர் சமுதாயுமும் தான். குயிலை கூண்டில் அடைத்து பாடச் சொன்னால் பாடுமா? கற்றல் கற்பித்தலில் உளவியல் பற்றிக் கூறுபவர்கள், ஆசிரியர்களுக்கும் உள்ளம் என்று ஒன்று உண்டு என்பதை மறந்து விடுகின்றார்கள். அவர்கள் உள ரீதியாக நன்றாக இருந்தால் தானே கற்பித்தலில் ஈடுபட முடியும்?

    Reply : 0       0

    vaasahan Thursday, 16 June 2011 10:49 PM

    பெரிய அதிகாரிகள் தங்கள் பதவியை பாதுகாக்க எவரிடமும் செல்ல சமூகத்தின் வாக்குகளால் அரசியல் இலாபம் கண்ட அண்ணன் மார்கள் இருக்கிறார்கள். அப்பாவி ஆசிரியருக்கு யார் பாதுகாப்பு ? சம்மாந்துறை சமூகமே இன்னும் தாமதிக்காதே. உனது மக்களை ஒற்றுமைபடுத்து. உணர்ச்சிவசப்படும் மந்தைக்கூட்டமாக அன்றி சிந்திக்கும் மக்களையும் அவர்களுக்குத் தலைமை தாங்கும் அறிவுள்ள தலைமையையும் கண்டுபிடி.

    Reply : 0       0

    M.I.Aliyar Thursday, 16 June 2011 07:38 PM

    m.i.aliyar
    Urin thalaivari Mathikka teriyatha asiriya samookam

    Reply : 0       0

    Dr. I.M. Javahir Thursday, 16 June 2011 05:36 PM

    இடமாற்றங்கள் மிக நுணுக்கமாக செய்யப்பட வேண்டியவை. இவ்விடயத்தில் எமது உள்ளூர் மற்றும் மாகாண கல்வியதிகாரிகளின் அக்கறையும் செயற்பாடுகளும் ரொம்ப அடிமட்டத்தில் உள்ளன. உரியவர்கள் உரிய இடத்தில் இல்லை!!!! இதுவே எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம்!!!!!

    Reply : 0       0

    vaasahan Thursday, 16 June 2011 02:27 PM

    சம்மாந்துறை தலைவன் இல்லாத ஊர் என்பதால் கண்ட கண்ட ..... எல்லாரும் கையடிக்க தொடங்கிவிட்டார்கள். தேர்தல் காலங்களில் கண்ட கண்ட எல்லாரினதும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக ஆகும்போதும் அரசியல் வியாபாரத்தின் தனித் தனி இலாபங்களை கணக்குப்போடுவதிலும் உள்ள பாரதூரமான நஷ்டத்தை கல்விச்சமூகம் உணர இது நல்ல சந்தர்ப்பம். சூழவர உள்ளவர்கள் தத்தம் பிரதிநிதுத்துவத்தை புத்தி சாலித்தனமாக பாதுகாத்துவிட்டு இப்போது உங்களை பிரதேச வாதிகளாக பார்ப்பது அவர்களுக்கு தங்களை விரிந்த மனோபாவம் உள்ளவர்களாக காட்ட நல்ல சந்தர்ப்பம்.

    Reply : 0       0

    ameer Wednesday, 15 June 2011 08:28 AM

    sammanthurai makkal vaalka.
    sammanthurai makkal pola thairiyam kalmunai makkalukku illaiaa?

    Reply : 0       0

    najeema Thursday, 16 June 2011 01:31 PM

    அதிக லீவு உள்ள தொழிலும் வேண்டும், வீட்டுக்கு அருகில் பாடசாலை வேண்டும் எண்டால் எப்படி எதிர்கால மாணவர்களின் கல்வி ,ஒழுக்கம் சிந்தியுங்கள் கண்ணியமுள்ள ஆசிரியர்களே

    Reply : 0       0

    Ahamed Junaid Thursday, 16 June 2011 04:45 AM

    அப்படியானால் ,ஆசிரியர் தொழிலை விரும்பி எடுத்திருக்க கூடாது. போராட்டம், ஆர்பாட்டம் அந்த தொழிலில் கூடாது. மாணவர்களை தூண்டவும் கூடாது.மாணவர்கள் aarpaddankalil ஈடுபடுவதற்கு ஆசிரியர்கள் ஒருபோதும் இடமளிக்ககூடாது.

    Reply : 0       0

    ameer Thursday, 16 June 2011 03:14 AM

    உண்மை நிலையை அறிந்து பேசுங்கள் . இன்றைய ஆசிரியரின் சராசரி சம்பளம் போதுமா....
    இதில் இடமாற்றம்.

    Reply : 0       0

    junaideen Thursday, 16 June 2011 01:00 AM

    கடந்த கால ஆசிரியர்கள் Anurathapuram, பொலன்நறுவை போன்ற இடங்களிலும் kadamaiyaaththi tholil செய்யவில்லையா ? அப்படியானவர்கல்தான் பல இன மக்களோடும் பழகி vidayam thaarikalaaka இருந்தார்கள் . கோபம் வேண்டாம் .

    Reply : 0       0

    jannah Wednesday, 15 June 2011 08:05 PM

    ஆசிரியர்கள் கண்ணியமானவர்களா போராட்டகாரர்களா சிந்திக்க வேண்டிய காலமாகிவிட்டது.

    Reply : 0       0

    Athambawa Abdul Jabbar Wednesday, 15 June 2011 03:18 PM

    இது தேவைதானா?

    Reply : 0       0

    kalam Wednesday, 15 June 2011 02:10 PM

    சம்மாந்துறை ஆசிரியர்கள் அவர்களின் அசலை காட்டிவிட்டார்கள் .இவர்களிடம் கற்கும் பிள்ளைகள் பாவம். ஊர் தலைமைக்கும் கட்டுப்பட தவறி விட்டார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .