2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை கல்வி வலய மாணவர்கள் பாடசாலை பகிஷ்கரிப்பு

Super User   / 2011 ஜூன் 16 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

கல்முனை கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்கள் இன்று வியாழக்கிழமை பாடசாலை பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சர்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்தினை இரத்துச் செய்ய கோரியே மாணவர்கள் பெற்றோர்களின் அனுசரணையுடன் இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கினங்க கல்முனை பிரதேச பாடசாலைகளின் நுழைவாயில்களுக்கு முன்னால் ஆசிரிய இடமாற்றத்திற்கு எதிரான சுலோகங்கள் ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஒன்றுகூடியிருந்ததுடன் சில பாடசாலைகளுக்கு முன்னால் மாணவர்களினால் டயர் எரிக்கப்பட்டமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்நடவடிக்கையின் காரணமாக பாடசாலைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை.

இதேவேளை, பகிஷ்கரிப்பில் ஈடுபடும் மாணவர்கள் ஊர்வலமாக சென்று கல்முனை வலய கல்வி அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி சிரான் பெரேராவின் தலையீட்டையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பிரதிநிதிகள் கல்முனை வலய கல்வி பணிப்பாளரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனையடுத்து மாணவர்கள் வீடுகளுக்கு கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0

  • Ahamed Junaid Thursday, 16 June 2011 10:58 PM

    மாணவர்களை ஆர்ப்பாட்டம், டயர் எரிப்பு என தூண்டிவிடுவது யார்? ஆசிரியர் சமுதாயம் எந்த நிலைக்கு போகின்றது. எதிர்கால சமுதாயத்தின் நிலை என்னவாக போகின்றது? புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும் ஆசிரியர் தொழில் கண்ணியமானது என்பதை ஆசிரியர்களே முதலில் உணர வேண்டும்.

    Reply : 0       0

    akkarai Friday, 17 June 2011 01:24 AM

    ஒழுக்கமற்ற சமுதாயம் உருவாகப்படுகிறது.........

    Reply : 0       0

    JUNAID Friday, 17 June 2011 03:17 AM

    வேறு அரச நிறுவங்களில் இடமாற்றம் அமைதியாக நடைபெறுகின்றதே! ஏன் ஆசிரியர் சமுதாயம் மட்டும் போராடுகின்றது .கல்வி அமைச்சு கடுமையான சட்டம் கொண்டு வரல் வேண்டும். அதிகாரிகளை மதிக்காத ஆசிரியர்கள் எதிர்கால நல்ல சமுதாயத்தை ஒரு போதும் உருவாக்க போவதில்லை .

    Reply : 0       0

    abu amaan Sunday, 19 June 2011 02:17 AM

    சரியா சொன்னிங்க Junaid. இவர்கள் எங்கே நம் பிள்ளைகளுக்கு ஒழுக்கங்களை கற்று கொடுப்பார்கள் பெற்றோர்களே நீங்கள் இந்த விடயத்தினை கொஞ்சம் கவனத்தில் எடுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .