2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் நடவடிக்கைகள் குறித்து நாளை மாகாண அமைச்சரவை கூடி ஆராய்வு

Super User   / 2011 ஜூன் 21 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்கு மாகாண அசிரிய இடமாற்றங்கள் குறித்தும் மாகாண கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கைகள் குறித்தும் நாளை  புதன்கிழமை காலை அமைச்சரவை கூடி ஆராய்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்காலிகமாக டிசம்பர் மாதம் வரை இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்ஷானால் பிரேணையும் இன்று செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்பட்டு ஏகமனாதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்படடுள்ள இந்த இடமாற்றம் டிசம்பர் மாதம் நடைபெறும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.நிசாம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Xray Wednesday, 22 June 2011 12:19 PM

    நிசாம் சேர் நல்ல ஒபிசர். .......... மூணாம் வகுப்பு, ............பத்தாம் வகுப்பு .... இதுதான் மாகாண சபை இவங்க ஒரு கல்வி சமூகத்திற்கு விடை சொல்லுபவங்களா ...... இறைவா இதுவும் உண்ட விளையாட்டப்பா.

    Reply : 0       0

    vaasahan Wednesday, 22 June 2011 02:18 PM

    முதலில் அதிகாரிகள் அரசியல்வாதியாவதும் அரசியல் வாதிகள் அதிகாரிகளாவதும் முற்றாக துடைத்து எறியப்பட்டால் மகான் நிறுவகம் தப்பிப்பிளைக்கலாம்.

    Reply : 0       0

    vaasahan Wednesday, 22 June 2011 05:17 PM

    மக்களின் குறைகளையும் தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளையும் இனங்கண்டு செயலாற்றத் தெரியாத அதிகாரிகளுக்கு தேசியப்பட்டியல் எம்.பீ.பதவிகளை வழங்குமாறு நான் சிபாரிசு செய்கிறேன். பிரச்சினையை உச்சியிலிருந்து அணுகாமல் பிரச்சினை நடைபெறும் கலத்துக்குசென்று (கடிதம் விநியோகிப்பதற்காக அன்றி) அதனை நிவர்த்தி செய்யும் மனப்பங்குள்ள அதிகாரிகளை நியமிக்குமாறு ஜனாதிபதி அவர்களை ஒரு குடிமகனாக கேட்கின்றேன்.

    Reply : 0       0

    Ahamed Junaid Wednesday, 22 June 2011 08:40 PM

    எமது நாட்டு கல்வி நிர்வாகம் சீராக கொண்டு செல்ல மூன்றாம் எட்டாம் தரத்தினர் தடை போடுவதா? இறைவா எமது நாட்டை நீதான் காக்க வேண்டும் .

    Reply : 0       0

    SK Friday, 24 June 2011 05:16 PM

    நிஷாம் ஒரு சிறந்த கல்வி பணிப்பாளர் அவரை இடமாற்றம் செய்வது தவறான விடயம். மேல் இடத்தில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் செயற்படுவது தவறு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .