2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாகாண கல்வி பணிப்பாளரை இடைநிறுத்த கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம்

Super User   / 2011 ஜூன் 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரான எம்.ரீ.நிஸாமை பதிவியிலிந்து இடைநிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண அமைச்சரவை இன்று புதன்கிழமை தீர்மானித்தாக மாகாண அமைச்சரவை பேச்சாளரான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இந்த தீர்மானம் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவின் சிபாரிசுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண ஆசிரியர் இடமாற்றத்திற்காக 4.7 மில்லியன் ரூபா செலவிட்டமை, மாகாண அமைச்சரவையின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஆசிரியர் இடமாற்றம் ஒழுங்காக இடம்பெறுகின்றது என மாகாண அமைச்சரவைக்கு தெரிவித்துவிட்டு பின்னர் இந்த இடமாற்றத்தில் சில குளறுபடிகள் உண்டு என தெரிவித்தமை ஆகியன தொடர்பில் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்துமாறும் கிழக்கு மாகாண அமைச்சரவை மாகாண ஆளுநருக்கு சிபாரிசு செய்துள்ளதாக எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இந்த விசாரணை முடியும் வரை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரான எம்.ரீ.நிஸாமை வேறு பதவிகளில் நியமிக்குமாறும் கிழக்கு மாகாண அமைச்சரவை மாகாண ஆளுநருக்கு சிபாரிசு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்காலிகமாகா இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ஜனவரி மாத்தில் மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சரை ஆலோசகராகவும் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரை அங்கத்தவர்களாக கொண்ட குழுவொன்றை நியமிப்பது என அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சரவை பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Xray Thursday, 23 June 2011 03:28 AM

    கௌரவ உதுமா லெப்பே அமைச்சர் அவர்களே கல்வி பணிப்பாளர் அவர்களை மாற்றும் இந்த முயற்சி சமூகத்திற்கு மித பொருத்தமானது என கருதுகின்றீர்களா?

    Reply : 0       0

    mani Thursday, 23 June 2011 04:52 AM

    இது அரசியல் ரீதியாக எடுக்கபட்ட முடிவாகவே தெரிகின்றது. அவ்வாறு மாகாண பணிப்பாளர் செயற்பட்டிருந்தால் மாகாண அமைச்சர்கள் ஏன் இவ்வளவு காலமும் அமையிதியாக இருந்தனர்?
    இதற்கு மட்டும் நடவடிக்கை எடுக்கிற இவர்கள் கடந்த வாரங்களில் பாடசாலைகள் சட்டவிரோதமாக மூடப்பட்டபோதும் இமாணவர்களை வீதியில் இறக்கிய போதும் எங்கே போனார்கள்? தயவு செய்து கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்காதீர்கள்.

    Reply : 0       0

    mufa Thursday, 23 June 2011 05:17 AM

    yes. Mr. Xray.

    Reply : 0       0

    AHMED JUNAID Thursday, 23 June 2011 01:09 PM

    கல்வி அறிவு குறைந்தவர்கள் அரசியலுக்கு வந்ததன் பிரதி பலனே இப்படியான முடிவு .

    Reply : 0       0

    krish Thursday, 23 June 2011 03:04 PM

    மேலே சொல்வதை பார்த்தல் நாட்டில் அரசியல் தலையீடு இல்லாமலா எல்லாம் நடக்குது ? பிரக்டிகலா இருங்க.

    Reply : 0       0

    vaasahan Thursday, 23 June 2011 03:11 PM

    ஒருதலைப்பட்சமான எந்த முடிவும் வீணானதே. ஆனால் மா. ப. செலவிட்ட தொகை ஊதரித்தனமானதாக உள்ளது. மேலும் இடமாற்ற லிஸ்ட் சில ஊர்களில் முன்னரே வெளியாகி தேவையான திருத்தங்கள் மா. க.ப. இடம் செல்வாக்குள்ளோர் செய்தமையும் பரம ரகசியமானதே. செல்வாக்கு இல்லாதோரிடம் இராணுவ அதிகாரி போலவும் ஆளுநரிடம் செல்வாக்குப்பெற்ற அரசியல் வாதிகளிடம் தேவையான திருத்தங்கள் செய்யப்பட செல்ல பிள்ளையாட்டம் இவர் நடந்தமை அம்பாற மாவட்டத்தில் பிரபல்யமான செய்திகள்.

    Reply : 0       0

    Saleem Ramees Thursday, 23 June 2011 05:09 PM

    சிறந்த தீர்மானம்.இதை உடன் அமுல்படுத்த வேண்டும். தலை இருக்க ஒரு காலமும் வால் ஆடக்கூடாது. பட், கட்டாயம் ஜனவரி மாதம் இடமாற்றம் கொடுக்க வேண்டும் .சுமுகமாக உள்ள கிழக்கை, கல்வி அதிகாரிகள் என்ற பெயரில் குழப்பி கல்வியை நாசம் செய்யாதிர்கள் ப்ளீஸ். எது செய்வதென்றாலும் அதன் ஒழுங்கில் செய்ய வேண்டும் யா !!! இடமாற்றத்தை தடை செய்வதற்கு முயச்சி செய்த கிழக்கு மாகான அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேங்க்ஸ். ( தமிழ் மிரருக்கும் நன்றி)

    Reply : 0       0

    vaasahan Thursday, 23 June 2011 07:27 PM

    கல்வியறிவு இல்லாதவர்கள் அரசியலுக்குவந்தால் இந்த முடிவுக்கு வருவது ஒருபக்கம். அரசியலால் உயர் பதவிக்கு வந்தால் வான்கதவு திறக்கும் இடமாற்றத்தைத் தவிர வேறு எப்படி 'நிருவாகம்' பண்ணுவார்கள். அண்ணன்மார் துணை.

    Reply : 0       0

    Jalaludeen Thursday, 23 June 2011 11:49 PM

    மக்கள் பிரதிநிதிகள் இருக்க இவர் எப்படி தனி முடிவு எடுக்க முடியும். உண்மையில் இவர் மக்கள் பிரதிநிதிகளை வைத்து இதை முடித்திருக்கலாம்.

    Reply : 0       0

    Sahotharan Thursday, 23 June 2011 11:54 PM

    வாசஹன் அவர்களே உங்களுக்கு யார் அரசியலால் பதவிக்கு வந்தவர்கள் ,வராதவர்கள் என்று தெரியாது போல். நீங்கள் உங்களது இடம்மாற்றம் பற்றி மட்டுமே சிந்திகின்றீர்கள் போலும்.
    உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லலாம் : உலகம் அழியப்போகின்ற காலத்தில் தலைவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதற்கு இந்த அரசியல்வாதிகள் ஒரு உதாரணம்.

    Reply : 0       0

    raze Friday, 24 June 2011 09:35 PM

    bus kandatdar marukku thariuma uyar kalvi patri

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .