2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீரற்ற கால நிலையால் ஒரு வகை காய்ச்சல் பரவும் அபாயம்

Kogilavani   / 2011 ஜூன் 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வாரமாக இடம்பெற்றுவரும் காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தலைவலியுடன் கூடிய ஒரு வகை காய்ச்சல் மற்றும் கண் நோய் போன்றன பரவி வருகின்றன.

இதனால், வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையும், நுளம்புப் பெருக்கமுமே இந்நோய்கள் பரவலாக ஏற்படக் காரணம்.

டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களும் இம்மாவட்டத்தில் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .